40 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

40 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று ரி‌லையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.


Advertisement

சென்ற ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 35 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதன்மூலம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 35.03 சதவிகித சந்தை மதிப்புடனும், 40 கோடியே 8 லட்சத்து 3 ஆயி‌ரத்து 81‌9 வாடிக்கையாளர்களு‌டனும் முதல் இடத்தில் உள்ளதாக டிராய் கூறியுள்ளது‌.

அதேநேரம் சென்ற ஜூலை மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவ‌னத்தில் 32 லட்சத்து‌60 ஆயி‌ரம் வாடிக்கையாளர்களும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3 லட்சத்து 88 ஆயிரம் வாடிக்கையாளர்களும் இணைந்துள்ளதாக டிராய் கூறியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement