கேரள மாநில திரைப்பட விருது - அசத்திய கும்பலங்கி நைட்ஸ்.!

50th-Kerala-State-Film-Awards-was-announced-on-Tuesday

சிறந்த துணை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது கும்பலங்கி நைட்ஸ் படத்திற்காக ஃபகத் பாசிலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது


Advertisement

மகேஷின்ட பிரதிகாரம், 22 ஃபீமேல் கொட்டயம் உட்பட பல படங்களுக்கு கதை எழுதியவர் ஷியாம் புஷ்கரன். அவரது எழுத்தில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கும்பலங்கி நைட்ஸ். நான்கு சகோதரர்கள், அவர்களுக்கு இடையேயான வாழ்க்கை முறை. நான்கு சகோதரர்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் ஒருவராக ஃபகத் பாசில் நடித்திருப்பார். தன்னுடைய அசாத்திய நடிப்பு மூலம் வில்லத்தனத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து இருப்பார் ஃபகத்.

image


Advertisement

தற்போது அவரது நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக கேரள மாநில அரசு விருது அறிவித்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது கும்பலங்கி நைட்ஸ் படத்திற்காக ஃபகத் பாசிலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புகழ்பெற்ற திரைப்படமாகவும் கும்பலங்கி நைட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

image

அதேபோல் அப்படத்தில் நடித்த அன்னா பென்னுக்கு கவனம் பெற்ற நடிகை என்ற விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement