பாவனா குறித்த கருத்துக்கு எதிர்ப்பு - நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய பார்வதி.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மலையாளத்தில் தவிர்க்க முடியாத நடிகை பார்வதி. மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பார்வதி நடித்துள்ளார். கேரளா
மட்டுமின்றி தமிழகத்திலும் பார்வதிக்கு ரசிகர் கூட்டம் உண்டு. தவறு எனத் தெரிந்தால் உடனடியாக கண்டனத்தை பதிவு செய்யும் பார்வதி தற்போது
கேரள நடிகர்கள் சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.


Advertisement

Association of Malayalam Movie Artists (AMMA)என்ற அமைப்பு கேரள நடிகர் சங்கமாக இயங்கி வருகிறது. மலையாள நடிகர்கள் அனைவரும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். முன்னதாக கேரள நடிகை பாவனா தொடர்பான பிரச்னையின்போது இந்த சங்கத்தில் இருந்து சில நடிகைகள் விலகினர். ஆனாலும் தொடர்ந்து பார்வதி அச்சங்கத்தில் இருந்தார். இச்சங்கத்தின் சார்பாக நிதி திரட்டும் நோக்கில் டிவெண்டி20 என்ற திரைப்படம் ஏற்கெனவே எடுக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து கேரள நடிகர் சங்கத்தின் செயலாளர் பாபுவிடம் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நடத்தியது. அதில் டிவெண்டி20 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பாவனா நடிப்பாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,

image


Advertisement

டிவெண்டி20 படத்தில் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர். ஆனால் நடிகை பாவனாவுக்கு வாய்ப்பில்லை. அவர் நடிகர்
சங்கத்தில் தற்போது உறுப்பினராக இல்லை. இறந்த ஒருவர் எப்படி திரும்ப வர முடியும் என தெரிவித்தார். பாபுவின் இந்த பேச்சு இணையத்தில்
கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. உறுப்பினராக இல்லை என்பதால் ஒருவரை இறந்துவிட்டவர் என எப்படி கூறலாம் என பலரும்
கண்டனங்களை பதிவு செய்தனர். இதே கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக நடிகை பார்வதி தற்போது நடிகர் சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர்,

image

2018ம் ஆண்டு என்னுடைய சில நண்பர்கள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகினர். ஆனால் நான் தொடர்ந்து நீடித்தேன். என்னால் நடிகர் சங்கத்தை சீரமைக்க முடியும் என கருதினேன். ஆனால் தற்போது பொதுச் செயலாளர் பாபுவின் பேட்டியை பார்த்த பின்னர் அந்த நம்பிக்கை போய்விட்டது. நடிகர் சங்கத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. சங்கத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவரை இறந்துவிட்டதாக கூறும் பாபுவின் வார்த்தைகள் வெறுப்பை உண்டாக்குகிறது. அது வெட்கக்கேடானது. கூறிய வார்த்தைகளை திரும்பப் பெறவே முடியாது. இனியும் சங்கத்தில் நான் உறுப்பினராக இருப்பதில் அர்த்தம் இல்லை. அதனால் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement