தோனி மீதான பாசம்னா சும்மாவா... வீட்டையே மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய ரசிகர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திட்டக்குடி அருகே வீட்டையே மஞ்சள் நிற வண்ணங்களால் தோனியின் ரசிகர் ஒருவர் அலங்கரித்துள்ளார்.


Advertisement

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான கோபிகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் தோனி மீது மிகுந்த அன்பு கொண்ட ரசிகராக இருந்து வருகிறார்.

image


Advertisement

தோனி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வத்தோடு கண்டுகளித்த கோபிகிருஷ்ணன், தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். தோனி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்து சிஎஸ்கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தை தனது வீடு முழுமைக்கும் வண்ணம் பூசி உள்ளார். மேலும் தோனி படத்தினையும் சுவரில் வரைந்துள்ளார்.

வீட்டின் முகப்பு பகுதியில் ஹோம் ஆப் தோனி ஃபேன் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. இந்த வீட்டினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement