திருமணத்தை மீறிய உறவில் மனைவி... இரண்டு மகன்களை கொன்ற தந்தை கைது...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை பாலமேடு அருகே மனைவியின் திருமணத்தை மீறிய உறவால், மகன்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தையை 2 மாதங்கள் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குமார் - உஷாராணி தம்பதியினர். இவர்களுக்கு கோப்பெருஞ்சோழன், சித்தார்த் என்ற இரு மகன்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து உஷாராணிக்கு வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கணவர் குமார் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் மனைவி உஷாராணி அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

image


Advertisement

இதனால் ஆத்திரமடைந்த குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், தனது இரு மகன்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.

image

இதில் சித்தார்த் மற்றும் கோப்பெருஞ்சோழன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மருத்துவமனையிலிருந்து சில நாட்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்தநிலையில் மனைவி உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் இரு மகன்களை கொலை செய்த வழக்கில் குமாரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement