நடப்பு சீசனில் பிளே ஆஃப்-க்கு முன்னேற வேண்டுமெனில் விளையாடவுள்ள 7 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
களம் கண்ட அனைத்து சீசன்களிலும் PLAY OFF க்குச் சென்ற அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே. ஆனால் நடப்பு சீசனில் PLAY OFFக்குச் செல்லுமா? என்றால், அது உறுதி பட கூற முடியாத பதிலாக உள்ளது. நடப்பு சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது சென்னை அணி. ரன் ரேட் என்பதும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எழுச்சி பெற வேண்டிய அழுத்தத்துடன், சீசனின் இரண்டாம் பாதியை எதிர்கொள்ளவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். PLAY OFF க்குச் செல்ல வேண்டுமெனில், களம் காணவுள்ள 7 போட்டிகளில் ஆறில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஐந்தில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புண்டு, ஆனால் அது மற்ற அணிகளின் வெற்றி மற்றும் ரன் ரேட்டைச் சார்ந்தே இருக்கும்.
இதே போன்ற ஒரு இக்கட்டான சூழலை 2010 ஆம் ஆண்டை எதிர்கொண்ட சென்னை அணி, அந்த சீசனில் கோப்பையையும் வென்று அசத்தியது. ஆனால் அப்போது இருந்த துடிப்பு, முனைப்பு மற்றும் வேட்கை, இப்போது உள்ள வீரர்களிடமும் வெளிப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறியே.
இருப்பினும் சறுக்கல்களை மீறி சாதனை படைப்பதை பல முறை சாத்தியமாக்கிய காட்டிய தலைவனின் கீழ் சிஎஸ்கே உள்ளதால், சீசனின் இரண்டாம் பாதியை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளனர் ரசிகர்கள்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!