நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகிய இஷாந்த் ஷர்மா .. காரணம் இதுதான்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா நடப்பு ஐபிஎல் சீசனில் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

image

இந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இஷாந்த் ஷர்மா விளையாடியிருந்தார். 


Advertisement

ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் மூன்று ஓவர்களில் 26 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். 

பவுலிங் பயிற்சியின் போது விலா பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக பந்துவீச முடியாமல் சிரமப்பட்ட இஷாந்த் ஷர்மாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தசையில் காயம் ஏற்பட்டது கண்டறியபட்டது.


Advertisement

இதனையடுத்து அவர் இந்த சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஒரு வார காலம் ஓய்வில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 

loading...

Advertisement

Advertisement

Advertisement