தோட்ட வேலை என்று கூறி சவுதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்றுவிட்டு தன்னுடைய கணவருக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துவிட்டார்கள் என்று கூறி அவரது மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.
”சவுதி அரேபியாவில் தோட்ட வேலை என்று அழைத்துச் சென்று பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துவிட்டார்கள். அதோடு, கடந்த ஒன்றரை வருடமாக சம்பளம் கொடுக்காமல் எனது கணவரை துன்புறுத்தி வருகிறார்கள். ராமநாதபுரம் ஆட்சியர்தான் எனது கணவரை நாட்டிற்கு திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்“ என்று பெண் ஒருவர் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரியின் கணவர் நாகராஜன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் தோட்ட வேலைக்காக கூலியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு தோட்டவேலை அளிக்காமல் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணியிலும் அவருக்கு கடந்த ஒன்றரை வருடமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் உணவுக்கு அவர் திண்டாடி வரும் சூழல் நிலவி வருவதாகவும் அவரது மனைவி முனீஸ்வரி இன்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்விடம் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த புகாரில் ’என்னுடைய கணவரின் வருவாயை நம்பி வாழ்கிறோம். இரண்டு குழந்தைகளும் வயதான தாய் தந்தையும் இருக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருடமாக எனது கணவர் பணம் எதுவும் அனுப்பாததால் நாங்களும் இங்கு சாப்பாட்டுக்கே திண்டாடி வருகிறோம். என் கணவரிடம் பணம் கேட்டால் எனக்கு ஒன்றரை வருடமாக சம்பளம் தரவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.
ஒட்டகம் மேய்க்கும் என் கணவருக்கு உணவு கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை. அதனால், அவரை எப்படியாவது சொந்த ஊருக்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” கூறியுள்ளார்.
Loading More post
தருமபுரி: மர்மமான முறையில் உயிரிழந்த மக்னா யானை... வனத்துறையினர் விசாரணை!
கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான் தனது மகனுடன் சபரிமலையில் தரிசனம்
தடுப்பூசி திருவிழா: இந்தியாவில் ஒரேநாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை
கோயம்பேட்டில் சிறு குறு வியாபாரம் அனுமதிக்கப்படுமா? இன்று பேச்சுவார்த்தை