துணி மாஸ்க் பயன்படுத்துகிறீர்களா?: அப்படியானால் இதை கண்டிப்பாக கடைபிடியுங்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துணி வகை மாஸ்குகளை எப்படி பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்


Advertisement

சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் போன்ற அடிப்படை விதிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என அரசாங்கமும், மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

image


Advertisement

பொதுவெளியில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள்மீது காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதிகமானோர் துவைத்து மீண்டும் பயன்படுத்தும் துணி வகையிலான மாஸ்குகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த துணி மாஸ்கை அழுக்கானால் மட்டுமே துவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் உள்ளனர். ஆனால் துணி வகை மாஸ்குகளை தினமும் துவைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும், ஆய்வாளருமான ரெய்னா மெக்கண்டைர் தெரிவித்துள்ளார்.

image

இது குறித்து தெரிவித்துள்ள அவர், சர்ஜிக்கல் மாஸ்க், மற்றும் துணி மாஸ்க் இரண்டுமே எளிதில் அசுத்தமாகக் கூடியவை. இதில் சர்ஜிக்கல் மாஸ்க்கை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீண்டும் அதனை பயன்படுத்தக் கூடாது. ஆனால் துணை மாஸ்கை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் துணி மாஸ்க்கை தினமும் துவைக்க வேண்டும்.


Advertisement

image

ஒருமுறை பயன்படுத்தும் போதே அது கிருமிகள் படிந்து அசுத்தமாகிவிடும். கண்ணுக்கு அழுக்காக தெரியவில்லை என்றாலும் அது ஆபத்தானது தான். கிருமிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதனை தினமும் துவைப்பதும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement