ரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா? தவறாக காட்டும் கூகுள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மனைவி என கூகுளில் தேடினால் அது தவறுதலாக அனுஷ்கா ஷர்மா பெயரை காட்டுகிறது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியன்று பாலிவுட் நடிகையும், தனது காதலியுமான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார். தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பிணியாக இருக்கிறார். இருவரும் காதலித்த காலம் முதல் தற்போது திருமண ஆன பின்னர் நடந்த பல விஷயங்கள் உலகமறிந்தவை.

image


Advertisement

இந்நிலையில், கூகுளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கானின் மனைவி எனத் தேடினால், அங்கு அனுஷ்கா ஷர்மாவின் பெயர் முன்னிறுத்தப்படுகிறது. அத்துடன் அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படங்களும் பிரதிபலிக்கின்றன. இது முற்றிலும் தவறான தகவலாகும்.

image

அனுஷ்கா ஷர்மாவின் கூகுள் பிரொஃபைல் முடியும் இடத்தில், ரஷித் கான் பற்றிய சிறிய குறிப்பு ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதில் ரஷீத் கான் திருமணம் ஆனவர் என்றும், அவரது மனைவி பெயர் அனுஷ்கா ஷர்மா என்றும் பதிவு செய்யப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும். அத்துடன் விராட் கோலிக்கும், அனுஷ்கா ஷர்மாவிற்கும் திருமணமான தேதியே, ரஷீத் கானின் திருமணத் தேதி எனவும் கூகுளில் தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் ரஷீத் கானுக்கு இன்னும் திருமணமாகவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement