சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை - 75 வயது முதியவர் உட்பட 6 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராசிபுரம் அருகேயுள்ள அணைப்பாளையத்தில் 12 மற்றும் 13 வயது சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்ததாக 75 வயது முதியவர் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமியின் மனைவி பழனியம்மாள். இவரது கணவர் இறந்து விட்டதால் தனியார் ஜவ்வரிசி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளும், 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளும் உள்ளனர். 

 image


Advertisement

இந்நிலையில், இவரது இரண்டு சிறுமிகளுக்கும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ரஞ்சித பிரியாவுக்கு புகார் வந்ததையடுத்து அதிகாரிகள் ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த சிவா, சண்முகம், முத்துசாமி (75முதியவர்), மணிகன்டன், சூர்யா, செந்தமிழ்செல்வம் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 image


Advertisement

 விசாரணையில் பழனியம்மாள் வேலைக்குச் சென்ற சமயம் வீட்டில் 2 சிறுமிகளும் தனியாக இருந்துள்ளனர். இதனை பயன்படுத்தி கடந்த 6 மாதங்களாக சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக அதிர்ச்சியூட்டும் விதமாக தெரிவித்தனர்.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்ததை அடுத்து அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டு நாமக்கல் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement