இந்திய திபெத் எல்லை காவல் படை வீரர்களுக்கு சல்யூட் வைத்த சிறுவன் : வைரலாகும் வீடியோ 

LADAKH-Boy-salutes-Indo-Tibetian-Border-Police-VIDEO-GOES-VIRAL-IN-SOCIAL-NETWORK

லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய திபெத் எல்லை காவல் படை வீரர்களுக்கு சிறுவன் ஒருவன் சல்யூட் வைக்கின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் டாக் ஆகியுள்ளது. 


Advertisement

image

லடாக்கின் சுஷுல் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருக்கும் நம்கியால் என்ற சிறுவன் தன்னை கடந்து செல்லும் இந்திய திபெத் எல்லை காவல் படை வீரர்களுக்கு அவர்களது பாணியிலேயே முறையாக அட்டேன்ஷனில் நின்று சல்யூட் வைத்து தனது வீர வணக்கங்களை தெரிவித்துள்ளான்.


Advertisement

அதனை செல்போனில் வீடியோவாக ரெக்கார்ட் செய்துள்ளார் அதிகாரி ஒருவர். அந்த வீடியோவை இந்திய திபெத் எல்லை காவல் படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதில் தங்களுக்கு சல்யூட் வைக்கும் சிறுவனுக்கு ராணுவ முறைப்படி எப்படி சல்யூட் வைப்பது என பயிற்சி கொடுத்துள்ளார் அதிகாரி ஒருவர்.


Advertisement

நேற்று வெளியான  அந்த வீடியோ இணையதள பயனர்களின் நெஞ்சங்களை வென்றுள்ளது. அதனால் சிறுவனின் செயலை பாராட்டி லைக்ஸ்களும், கமெண்டுகளும் அதற்கு குவிந்து வருகின்றன. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement