"குஷ்பு பாஜகவை எவ்வளவு விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்" பி.டி.அரசகுமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை குஷ்பு பாஜகவை எவ்வளவு விமர்சனம் செய்தார் என்பது அனைவருக்குமே தெரியும். பெண்கள் மத்தியில் குஷ்பு மீது எந்த மாதிரியான அபிப்பிராயம் இருப்பது என்பது அனைவரும் அறிந்ததே என புதுக்கோட்டையில் திமுக மாநில செய்தித் தொடர்பாளர் பிடி.அரசகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 


Advertisement

image

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்த திமுக மாநில செய்தித் தொடர்பாளர் பிடி.அரசகுமாருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிடி.அரசகுமார், "நடிகை குஷ்பு பாஜகவை எவ்வளவு விமர்சனம் செய்தார் என்பது அனைவருக்குமே தெரியும். பெண்கள் மத்தியில் குஷ்பு மீது எந்த மாதிரியான அபிப்பிராயம் இருப்பது என்பது அனைவரும் அறிந்ததே. பாஜகவில் யார் இணைந்தாலும், நாங்கள் பாஜகவை சார்ந்தவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தினாலும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். நாங்கள் தான் முதல்வராவோம் என்று தரைமேல் குதித்தாலும் நிச்சயம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்,


Advertisement

 

 

image


Advertisement

திமுக என்பது எஃகு கோட்டை. அதை யார் கொட்டினாலும் கொட்டுபவர்கள் கைதான் வலிக்கும். திமுகவிற்கு நான் புதியவன் அல்ல, கருணாநிதி காலத்திலேயே இலக்கிய அணியிலிருந்து கலக்கியவன் நான். இங்கு உள்ள அனைவரின் ரத்தத்திலேயே திராவிட சிந்தனைகள் கலந்துள்ளது. மாற்று கட்சியிலிருந்து இணைந்தாலும் திறமையையும் தகுதியையும் பார்த்தே பதவிகளும் பொறுப்புகளும் திமுகவில் வழங்கப்பட்டு வருகின்றது. திமுகவில் எந்த ஒரு உட்கட்சி பூசலும் இல்லை, கடந்த தேர்தலில் சின்ன கவனக்குறைவால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை அந்த கவனக்குறைவையும் தவிர்த்து ஆட்சி அமைப்போம்" என்று தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement