குஷ்பு நடிகையாகவே இருந்தார்; கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை - கே.எஸ்.அழகிரி

KS-Alagiri-speaks-about-kushboo

காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாக பார்க்கவில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்


Advertisement

காங்கி‌ரஸ்‌ கட்சியின்‌ தேசி‌‌‌ய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, பா‌ரதி‌ய ஜனதா கட்சியில் இன்று இணைய உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பா‌ஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா‌ முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணையவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தையும் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ளார்.

image


Advertisement

அதில், கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னைப் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியின் உயர்பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். பணம் புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்தேன். காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குஷ்புவின் விலகல் குறித்து பேசிய கே.எஸ்.அழகிரி, குஷ்பு கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும்,

image

காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாக பார்க்கவில்லை. கட்சியிலும் அவர் நடிகையாகவே இருந்தார். குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால் காங்கிரஸூக்கு எந்த இழப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்


Advertisement

‘சிலர் என்னை ஒடுக்கினர்’ - காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement