வெற்றிகரமாக மறு நடவு செய்யப்பட்ட 90 ஆண்டு அரசமரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பூரில் 90 வயதான அரச மரம் ஒன்று இடம் மாற்றி நடப்பட இருந்த நிலையில் அம்மரத்திற்கு பொது மக்கள் பூஜை செய்து பூத் தூவி வழியனுப்பி வைத்தனர்


Advertisement

திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் இருந்தது. மாநகராட்சி இடத்தில் இருந்த அந்த மரத்தை அகற்றிவிட்டு அங்கு சமுதாய கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இளங்கோ என்ற இயற்கை ஆர்வலர் அம்மரத்தை மறு நடவு செய்ய மாநகராட்சியிடம் அனுமதி பெற்றார். இதைத்தொடர்ந்து இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் வேருடன் மரம் பெயர்க்கப்பட்டு, ராட்சத டிரக்கில் ஏற்றப்பட்டது.

image


Advertisement

முன்னதாக மரத்தின் காயமடைந்த பகுதிகள் சாணம் கொண்டு மெழுகப்பட்டு மிகுந்த கவனததுடன் பெயர்க்கப்பட்டது. ராட்சத டிரக்கில் எடுத்து செல்லப்பட்ட அரசமரத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பூஜை செய்து மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர். டிரக் மூலம் காளம்பாளையம் பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட அரசமரம், கிரேன்களின் உதவியுடன் வெற்றிகரமாக மறுநடவு செய்யப்பட்டது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement