வைஃபை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது

ex-bank-officer-arrested-due-to-scam-wifi-and-debit-card

சென்னையில் வைஃபை வசதியுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி, 6 லட்சம் ரூபாய் வரை நூதன முறையில் மோசடி செய்த முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

போரூரைச் சேர்ந்த ஹரி விஸ்வநாதன் என்பவரின் டெபிட் கார்டு திருடப்பட்டு, அதில் இருந்து 70ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான சரவணன் என்பவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் ஏடிஎம் மையங்களிலும் வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் விட்டுச் செல்லும் வைஃபை வசதியுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி பணம் எடுத்து வந்துள்ளார்.

image


Advertisement

இதற்காக போலியான ஆவணங்களை கொடுத்து ஸ்வைப்பிங் மெஷினை வாங்கி, அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 6 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துள்ளார். தனது குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக, இது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பின்னர் அவரிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின், 13 டெபிட் கார்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement