ஆன்லைன் வகுப்புகளுக்கு மூன்றுவாரம் விடுமுறை: கர்நாடக அரசு அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

கர்நாடக மாநில கல்வித்துறை அக்டோபர் 12 முதல் மூன்று வாரங்களுக்கு இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் விடுப்பு வழங்கப்படும், ஆன்லைன் வகுப்புகளும் இந்த மூன்றுவாரம் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பள்ளிக்கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் இடைக்கால விடுமுறைகளை (தசரா விடுமுறைகள்) ரத்து செய்வதாக அறிவித்த 10 நாட்களுக்குப் பிறகு மாநில அரசு இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.


Advertisement

கோவிட் -19 தொற்றுநோயால் வகுப்புகள் மற்றும் வித்யகம திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார். "பல ஆசிரியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 12 முதல் அக்டோபர் 30 வரை மூன்று வார விடுமுறை விடப்பட்டுள்ளது" என்று அவர் உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்கூட்டியே மகிழ்ச்சியான தசரா வாழ்த்துகளையும் தெரிவித்தார். அக்டோபர் 15 க்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யவிருந்தது, இந்த முடிவால் அது தள்ளிப்போயுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement