தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Advertisement

தென்கிழக்கு வங்கக் க‌டலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆய்வு மையம் நாளை இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது.

image


Advertisement

இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வரும் 14ஆம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement