தோனியின் பண்ணை வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு : காரணம் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனியின் மகள் ஜிவாவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பண்ணை வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதன்படி, ஐபிஎல் போட்டியின் 21வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

image


Advertisement

அன்றைய தினம் ஒரு நபர் அநாகரீகமாக தோனியின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார். போலியான ஐ.டி மூலம் அந்த நபர் பதிவிட்டிருந்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இதன் எதிரொலியாக ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு தான் தோனியின் மனைவி சாக்ஸி மற்றும் மகள் ஜிவா ஆகியோர் தற்போது வசித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நடமாடும் சந்தேகத்திற்குரிய நபர்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement