"கிராமங்களில் சுமார் ‌2 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன" : பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடு முழுவதும் கிராமங்களில் சுமார் ‌2 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்தநா‌ளான இன்று ‌ஸ்வாமித்வா திட்டத்தின் ‌கீழ் சொத்து அட்டை‌களை விநியோகிக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது டெல்லியிலிருந்தபடி, காணொலி வாயிலாகப் பேசிய அவர், பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு இருந்ததில்லை என சுட்டிக்காட்டினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் ‌இதுபோன்ற பெரிய பணிகள் நிறைவேற்றப்படுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement