இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2008-இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது 38 வயதாகும் மாலிக் கடந்த 1999ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
டி20 போட்டிகளின் வரவுகளுக்கு பிறகு பல்வேறு நாடுகளின் டி20 தொடர்களில் விளையாடி வரும் மாலிக் அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் KHYBER PAKHTUNKHWA அணிக்காக 44 பந்துகளில் 74 ரன்களை குவித்தார்.அதன் மூலம் ஆசியாவிலேயே டி20 போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார் ஷோயப் மாலிக்.
- "I would like to congratulate the people of Pakistan as I am the first Asian cricketer to have reached this milestone of making 10,000 runs in #T20 cricket & I hope I will carry on in the way I have been playing. I'd like to dedicate this milestone to my parents... pic.twitter.com/btiOGpTJo9 — Shoaib Malik ?? (@realshoaibmalik) October 10, 2020
தனது புதிய சாதனைக்காக மாலிக் அவரது குடும்பம், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லியுள்ள நிலையில் கணவரின் சாதனையை பாராட்டை ட்விட்டரில் மனம் உருகி ட்வீட் போட்டுள்ளார் சானியா மிர்சா.
???? Longevity ,patience ,hard work ,sacrifice and belief @realshoaibmalik ❤️ so proud ?? https://t.co/XpOsPqpzXy — Sania Mirza (@MirzaSania) October 10, 2020
“உங்களது நீண்ட நெடிய அனுபவம், பொறுமை, விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு, தியாகம் மற்றும் நம்பிக்கையை கண்டு பெருமை கொள்கிறேன்” என அதில் சொல்லியுள்ளார் சானியா மிர்சா.
சர்வதேச அளவில் கிறிஸ் கெய்ல் மற்றும் பொல்லார்டுக்கு அடுத்தபடியாக பத்தாயிரம் ரன்களை ஷோயப் மாலிக் மூன்றாவது வீரராக எட்டியுள்ளார்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’