அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனின் ஃபர்ஸ்ட் HALF முடிந்துள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் பின்தங்கி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஏழு ஆட்டங்களில் விளையாடி வெறும் இரண்டே வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது சென்னை.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து டிப்பார்ட்மென்டிலும் சொதப்பலான ஆட்டத்தை கொடுத்து வருகிறது சென்னை.
இதே பாணியில் எஞ்சியுள்ள ஆட்டங்களிலும் விளையாடினால் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை முன்னேறுமா என்பதே ரசிகர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு சீஸனில் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளனவா என்பதை அலசுவோம்.
சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 2010 சீஸனிலும் இதே நிலையில்தான் சென்னை முதல் ஏழு ஆட்டங்களில் பின்தங்கியிருந்தது.
அந்த சீஸனில் ஏழு ஆட்டங்களில் விளையாடி வெறும் இரண்டே ஆட்டங்களில் தான் வென்றிருந்தது. அதற்கடுத்து விளையாடிய ஏழு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியிலில் மூன்றாவது இடத்தை பிடித்ததோடு அந்த சீஸனில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது சென்னை.
அதே போல நடப்பு சீஸனிலும் தோல்விகளை கடந்து ஃபீனிக்ஸ் பறவையாக சென்னை அடுத்த ஏழு ஆட்டங்களிலும் வின்னிங் நாக் கொடுத்து அசத்தலாம்.
அதற்கு கடந்த ஏழு போட்டிகளில் செய்த தவறுகளை கொஞ்சம் சரி செய்தால் சென்னை மீண்டும் சாம்பியனாக ஜொலிக்கலாம்.
அதே நேரத்தில் அந்த வெற்றி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சென்னை பெற்றாக வேண்டும். அப்போது தான் புள்ளிப்பட்டியலில் டாப் நான்கு இடங்களை பிடிக்க முடியும்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி