சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: ஜெயக்குமார் வாழ்த்து 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

'எதற்கும் தயங்காதே.. முன்னே செல்..' என்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.  


Advertisement

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012ஆம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ''உரிமையை பெறு! உரக்க பேசு! உயர்ந்து நில்! உயர செல்! உலகம் உனது! எதற்கும் தயங்காதே! முன்னே செல்! முன்னெடுத்துச் செல்! அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...'' என பதிவிட்டுள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement