முந்தைய போட்டிகளில் ஏற்பட்ட அழுத்தங்களே சி.எஸ்.கே. அணிக்கெதிராக அடித்தாட தூண்டியது என்று தெரிவித்துள்ளார் கோலி.
நேற்று நடந்த ஐபிஎல் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் விராத் கோலி இறுதிவரை களத்தில் பொறுப்பாக நின்று 52 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். ஆட்டநாயகனாகவும் அவர் தேர்வானார். இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வெற்றிக்கு பின்னர் கோலி கூறுகையில், ‘’இப்போட்டியில் நாங்கள் எங்களுடைய முழுமையான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். முதல் பாதியில் நாங்கள் நல்ல நிலைமையில் இல்லை. ஆனால் இரண்டாவது பாதியில் நல்ல நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். மேலும் ஆட்டத்தின் முடிவில் 140 முதல் 150 ரன்கள் அடித்தால் நல்லது என்று கருதினேன். ஆனால் முடிவில் ரன்கள் கொஞ்சம் அதிகமாகவே வந்தது.
அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த வெற்றியை அப்படியே தொடர்ந்து கொண்டு செல்ல விரும்புகிறோம். இந்த போட்டியில் இறுதி வரை நின்று எப்படி அடிக்க முடியும் என்பதையும் புரிந்து கொண்டோம். பொறுப்பைப் பற்றி அதிகம் நினைத்தால், நீங்கள் சுமையாகி விடுவீர்கள். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினார். மோரிஸ் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதல் மூன்று போட்டிகளில் எனக்கு கொஞ்சம் போராட்டமாக இருந்தது. அது இந்த போட்டியில் அதிக அழுத்தத்தை உண்டுபண்ணியது. ஆனால் அதுவே நல்ல ஸ்கோரை அடைவதற்கு சாதகமாக அமைந்தது’’ என்றார்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!