உயர்கல்வி நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா விழிப்புணர்வைக் கொண்டு செல்வதற்கு ஜன் அந்தோலன் என்கிற மக்கள் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், சமூக வலைதளங்கள் என அனைத்துவகையான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுபற்றிய அறிக்கையை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு செயலர் ரஜ்னிஷ் அனுப்பியுள்ளார். அதில், விழிப்புணர்வு பிரச்சாரத்தில் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியவேண்டும். தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை தூய்மையாகக் கழுவுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிப்பேன் எனப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் - கே.என்.நேரு
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'