ஊருக்குள் உலவிய மம்மூத் கடல் யானை: ஆச்சர்ய வீடியோ

video--Mammoth-elephant-seal-found-wandering-around--scared-and-confused--in-Chilean-coastal-town

சிலி நாட்டின் புவேர்ட்டோ சிஸ்னெஸ் என்ற கடற்கரை நகரத்தின் தெருக்களில் இரண்டு டன் எடையுள்ள கடல்யானை குதித்து உலவிக் கொண்டிருக்கும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அமைதியாக இருந்த சிலி நாட்டின் கடலோர நகரமான புவேர்ட்டோ சிஸ்னெஸின் இரவு நேரத்தில் இரண்டு டன் எடையுள்ள கடல்யானை தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோ பதிவாகியுள்ளது. கடல்யானை வீதிகளில் உலவும் வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


Advertisement

மற்றொரு வீடியோவில், தெருக்களில் உலவிய இந்த கடல்யானையை மக்கள் மீண்டும் கடலுக்கு கொண்டுசெல்லும் வீடியோவையும் காணலாம். எந்த வகையிலும் கடல்யானைக்கு தீங்கு விளைவிக்காமல், பொதுமக்கள் மீண்டும் அதன் வாழ்விடத்தில் மீண்டும் கொண்டுசென்றுவிட்டனர். இதுபோன்ற சம்பவங்களை சிலி சந்திப்பது இது முதல் முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு, நாட்டின் தலைநகர் சாண்டியாகோவின் தெருக்களில் ஏழு மலை சிங்கங்கள் உலாவந்தன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement