வாட்ஸ்அப் குரூப் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது... 1 கிலோ கஞ்சா பறிமுதல்

3-arrested-for-selling-cannabis-through-WhatsApp-group-----1-kg-of-cannabis-seized----

சென்னை புறநகர் பகுதிகளில் வாட்ஸ்-அப் குழு மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

image

 சென்னை புறநகர் பகுதிகளான நசரத்போட்டை, செம்பரம்பாக்கம், பூவிருந்தவல்லி, மேப்பூர் போன்ற பகுதிகளில் வாட்ஸ்-அப் குழு மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் நசரத்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 


Advertisement

image

இதில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்-அப் குழு மூலம் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து நசரத்பேட்டையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (21), ஹேமகுமர் (21), சரண்ராஜ் (23), ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

image


Advertisement

இவர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறுக, சிறுக பிரித்து வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 1கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement