பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக வலைதளங்களில் வெளியிட்ட கணவர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை சோழவந்தானில் பிரிந்து வாழும் மனைவியை பழிவாங்க அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பட்டதாரி கணவர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

 மதுரை மாவட்டம் சோழவந்தான் தெற்கு ரத வீதியை சேர்ந்த ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கன்னியாகுமரி அருகே தக்கலையில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

 இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே ராஜமுருகன் குடிபோதையில் தனது மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரம்யா திருமணமான 20 நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து மதுரை சோழவந்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.


Advertisement

 

 

image


Advertisement

 


இதனைத் தொடர்ந்து பிரிந்து சென்ற மனைவி ரம்யாவை பழிவாங்க எண்ணிய ராஜமுருகன் ரம்யாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, மார்பிங் செய்த புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ்ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றியதோடு பெண் வீட்டாருக்கும் வாட்ஸ்ஆப்-ல் அனுப்பி வைத்துள்ளார்.

 இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரம்யா, தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவேற்றம் செய்த கணவர் ராஜமுருகன் மீது சோழவந்தான் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ரம்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

image

கடந்த ஆறுமாத காலமாக  தலைமறைவாக இருந்த ராஜமுருகனை, ஆய்வாளர் வசந்தி தலைமையிலான போலீசார் கைதுசெய்து வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement