திருச்சியில் 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய போலீஸ்காரரின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்தி (26), தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் சுமதியுடன் (21) செல்போன் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலித்து கடந்தாண்டு சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் திருச்சி திருவரம்பூர் பாலாஜி நகரில் வசித்து வந்தனர். கார்த்தி அப்பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார். கணவர் நடத்தையில் சந்தேகமடைந்த சுமதி, அவரது செல்போனை எடுத்து பார்த்த போது கார்த்தி பல பெண்களுடன் இருக்கும் போட்டோ இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் சுமதி. விசாரித்த போது ஏற்கெனவே திருச்சியைச் சேர்ந்த ஸ்டெல்லா, சென்னையை சேர்ந்த வாணி, மற்றும் நீலா உள்ளிட்ட 3 பேரை திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கார்த்திக்கிடம் சுமதி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லால்குடி மகளிர் போலீசார் கார்த்தியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? : ஆளுநர் தமிழிசை விளக்கம்
இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2023 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாடுகளுக்கு இடையே தினசரி 4 காட்சிகள்: தியேட்டர்களின் புதிய அட்டவணை
சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரை மின்சார ரயில் சேவை ரத்து
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்