இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவனில் தமிழக வீரர் நாராயன் ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்று வரும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 15 போட்டிகளிலும், பெங்களூர் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால். இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் காண்கிறது சிஎஸ்கே.
இந்தப் போட்டியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். TNPL தொடரில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த நாராயண் ஜெகதீசன் 2018 சீஸனிலேயே சென்னை அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஆடும் வாய்ப்பை பெறவில்லை. மற்ற அணிகளில் TNPL தொடரில் அசத்திய வீரர்கள் ஆடும் லெவனில் இடம்பெற்று அசத்தி வருகின்றனர்.
ஆடும் லெவன் விவரம்:
சென்னை அணி:
ஷேன் வாட்சன்
டுபிளசிஸ்
அம்பத்தி ராயுடு
என்.ஜெகதீஷன்
தோனி
ரவீந்திர ஜடேஜா
பிராவோ
ஷர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்
கர்ண் ஷர்மா
பெங்களூர் அணி விவரம்
தேவ்தத் படிக்கல்
ஆரோன் பின்ச்
விராட் கோலி
டிவில்லியர்ஸ்
குர்கீரட் சிங்
வாஷிங்டன் சுந்தர்
ஷிவம் துபே
கிறிஸ் மோரிஸ்
நவ்தீப் சைனி
உடானா
சாஹல்
Loading More post
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை