தமிழ் தெரியாத வங்கி மேலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கி மேலாளருக்கு தமிழ் தெரியவில்லை எனக் கூறி வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

image

புதுச்சேரியை அடுத்துள்ளது கிருமாம்பாக்கம் இதை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளது. அங்குள்ள விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்குள்ள இந்தியன் வங்கியில் தான் கணக்கு வைத்துள்ளார்கள், இந்நிலையில் இந்த வங்கியில் மேலாளராக பிரபாத்ரன்ஞன் என்பவர் பணியாற்றி வருகின்றார்.


Advertisement

இந்நிலையில் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் கூறியுள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர் நீங்கள் பேசும் மொழி புரியவில்லை தமிழில் பேசுங்கள் எனக்கூற அதற்கு அவர் எனக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிதான் தெரியும் என ஆங்கிலத்தில் கூறுகின்றார். 

image  


கிராமப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எப்படி ஆங்கிலம் தெரியும், தமிழில் தானே பேச வேண்டும். தமிழ் தெரிந்த அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை என வாடிக்கையாளர் வாதம் செய்கின்றார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் வங்கி அதிகாரி போலீசாருக்கு போன் செய்கின்றார்.


Advertisement

இதனையடுத்து அங்கு வந்த காவலர்கள் வாடிக்கையாளரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றார்கள். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

loading...

Advertisement

Advertisement

Advertisement