டெல்லியில் வேறு சமூக இளம் பெண்ணை காதலித்ததால் 18 வயதான டியூசன் ஆசிரியர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் புதன்கிழமை இரவு வடமேற்கு டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் நடந்துள்ளது. இருவருக்கும் இடையிலான உறவுக்கு எதிராக இளம் பெண்ணின் குடும்பத்தினர் இருந்ததாக கூறப்படுகிறது. பலியானவர் ராகுல் ராஜ்புத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தியின் படி, பெண்ணின் உறவினர்கள் ஆசிரியரை கம்பு மற்றும் கம்பிகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராகுல் ராஜ்புத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர் முகமது ராஜ், அவரது உறவினர் மன்வர் உசேன் மற்றும் மூன்று மைனர் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையான ராகுல் ராஜ்புத்தின் தந்தை சஞ்சய் ராஜ்புத் கூறுகையில், "சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, அந்த சிறுமி ராகுலுக்கு போன் செய்திருந்தார். அப்போது ராகுலின் அம்மா மீண்டும் இதுபோல் போன் பண்ணக்கூடாது என்று அச்சிறுமியை எச்சரித்தார். இருவரும் முன்பு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள், அங்கு நண்பர்களாக இருந்திருக்க வேண்டும்" என்றார்.
Loading More post
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி