பைக்கில் வந்து பர்ஸ் பறிக்க முயற்சி... மூன்று திருடர்களுடன் போராடிய துணிச்சல் பெண்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பஞ்சாப் மாநிலம், பட்டின்டா மாவட்டத்தின் ராம்புரா பால் நகரில் பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களுடன் ஓர் இளம்பெண் தீரத்துடன் போராடிய  சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Advertisement

அந்தக் காட்சியில் டியூசன் மையத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்புகிறார் ஒரு பெண். அப்போது பைக்கில் வேகமாக வந்த மூன்று பேர் அவரது பர்ஸை பறிக்க முயற்சி செய்கிறார்கள். உடனே அவர் கீழே விழுகிறார். பின்னர் அவரை மீண்டும் தாக்கி பறிக்க முயற்சிக்கிறார்கள். அதிலிருந்தும் தப்பிக்கும் அந்தப் பெண், திருடர்களை விரட்டிச்செல்கிறார்.

image


Advertisement

இந்த சம்பவம் பற்றிப் பேசிய அந்தப் பெண், " பைக்கில் திருடர்கள் வருவதை நான் அறியாமல் நடந்துகொண்டிருந்தேன். என் பர்ஸை அவர்கள் பறிக்க முயன்றார்கள். நான் அதை விடவில்லை. கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அதில் என் செல்போன் இருந்தது. டியூசன் மையத்துக்குச் செலுத்தவேண்டிய ரூ. 15 ஆயிரம் பணமும் இருந்தது" என்றார்.

சாலையில் வந்துகொண்டிருந்த பொதுமக்கள், பைக் திருடர்களுடன் ஒரு பெண் போராடுவதைப் பார்த்து அவர்களில் இருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தைகள் போல பாட்டிலில் பால் குடிக்கும் குரங்குக் குட்டிகள்: வைரல் வீடியோ


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement