மதுபாட்டிலுடன் சாலையில் கவிழ்ந்த லாரி... மதுகுடிப்போர் சூழ்ந்ததால் பரபரப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டாஸ்மாக் கிடங்கில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மதுகுடிப்போர் சூழ்ந்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Advertisement

image

கடலுர் மாவட்டம் அரசு டாஸ்மாக் கிடங்கில் இருந்து சுமார் ஒருகோடி மதிப்புள்ள மது பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தது.


Advertisement

 image

 அப்போது காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி கரையோரம் உள்ள சின்ன மணல்மேடு என்ற இடத்தின் அருகே எதிரே வந்த லாரி திடீரென வழிமாறும் போது மதுபானங்களை ஏற்றிவந்த லாரி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து மதுபாட்டில்கள் உடைந்து சிதறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

image


Advertisement

 பொதுமக்களும் மதுப்பிரியர்களும் விபத்துக்குள்ளன லாரியை சூழ்ந்து கொண்டனர். இதனால் காவல்துறையினரும் மற்றும் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய இருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement