இரண்டு மாதக் குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர்: கைது செய்த காவல்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரண்டு மாதக் குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

கடந்த செவ்வாய்கிழமை மகாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள  தேவாலயத்தின் அருகே இரண்டு மாதக் கைக்குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, சாலை வழியே சென்றவர்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் 35 வயதாகும் பொறியாளரும் அவரது 30 வயது மனைவியும் குழந்தையைக் கைவிட்டுச் சென்றது தெரிய வந்தது.

image


Advertisement

இதுகுறித்து கால்துறையைச் சேர்ந்தவர்கள் பேசும்போது, ’குழந்தையின் பெற்றோர். கடந்த மூன்று வருடங்களாக கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்து பின்னர் ஒரு வருடமாக மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளார்கள். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், கணவரோ மனைவி மீது சந்தேகம் அடைந்து இந்தக் குழந்தை தனக்கு பிறந்ததல்ல என்று அடிக்கடி சண்டை போட்டுள்ளார். அதனாலேயே, இருவரும் சேர்ந்து தேவாலயத்தில் அருகில் குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்

 

loading...

Advertisement

Advertisement

Advertisement