வராண்டாவில் தூங்கிய வயதான தம்பதி... அடித்துக் கொன்ற மனநலம் குன்றிய சிறுவன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேசத்தில் மனநலம் குன்றிய சிறுவன் ஒருவன் வயதான தம்பதியினரை அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள கர்ஹோலி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் மவுரியா (70) மற்றும் அவரது மனைவி மைனா தேவி (65) ஆகிய இருவரும் நேற்றிரவு தங்கள் வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட கோலு மவுரியா என்ற சிறுவன் அந்த தம்பதியினரை அடித்துக் கொன்றுள்ளான். இதைக்கண்ட அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அலறினர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


Advertisement

மனநலம் பாதிக்கப்பட்ட கோலு மவுரியா மூர்க்கத்தனமாக நடந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. இதனால் அச்சிறுவனை அவரது குடும்பத்தினர் வீட்டிலுள்ள ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பது வழக்கம். சம்பவத்தன்று சிறுவன் கதவை திறந்து வெளியே வந்து தம்பதியினரை காரணமேயில்லாமல் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கொலையான தம்பதியரின் மகன் மும்பையில் பணிபுரிகிறார். சம்பவம் நடந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் தனியாக இருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement