பாலியல் வன்கொடுமை முயற்சி, ஓடும் காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட  பெண்: உ.பி அதிர்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலியல் வன்கொடுமை முயற்சிக்குபின் அப்பெண்ணை சீட்பெல்ட்டால் கழுத்தை நெறித்து, ஓடும் காரில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


Advertisement

image

உத்தரபிரதேசத்தின்  உன்னாவ்  மாவட்டத்தில்  ஆக்ரா-லக்னோ  அதிவேக நெடுஞ்சாலையில்  25 வயது  பெண் ஒருவர்  ஓடும் காரில் இருந்து தூக்கி  வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அந்த பெண்ணுடன் காரில் சென்ற உறவினரே அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அந்தப் பெண் சண்டையிட்டுள்ளார், இதனால் அவரை தாக்கிய அந்த நபர்  சீட்பெல்ட்டைப் பயன்படுத்தி  அப்பெண்ணின் கழுத்தை நெரிக்க முயன்றார். இதனால் சுயநினைவை இழந்த அப்பெண்ணை இறந்துவிட்டார் என்று நினைத்து காரிலிருந்து அவர்  தூக்கி எறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement

உ.பி. எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் ஊழியர்கள் சப்லி கெரா கிராமத்திற்கு அருகே  அந்த பெண் சாலையில் கிடப்பதை கண்டனர்.  தற்போது அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஆனந்த் குல்கர்னி தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement