’நான் இந்தியை வெறுக்கவில்லை’ -இந்தி எதிர்ப்பு டிஷர்ட் குறித்து யுவன் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், அவரது நண்பரும், ’I am a தமிழ் பேசும் இந்தியன்’, ’இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் எழுதிய டிஷர்ட்டுகளை அணிந்து வெளியிட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.


Advertisement

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய யுவனிடம் அந்த டிஷர்ட் அணிந்தது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு தெளிவான விளக்கமளித்துள்ளார் யுவன். அதில், ’’நான் நிறைய இடங்களுக்கு பயணம் செய்யக்கூடியவன். எனவே எனக்கு பகிர்ந்துகொள்ளக்கூடிய, பகிர்ந்துகொள்ள முடியாத நிறைய அனுபவங்கள் இருக்கும்.

உதாரணத்திற்கு, மும்பை விமான நிலையத்திற்குச் சென்று, அங்கு வேலை செய்பவர்களிடன் தமிழில் பேசச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஆனால் இங்கே வேலை செய்பவர்கள் ஏன் இந்தியில் பேசுகிறார்கள்? வெற்றிமாறன் எப்படி தனது கருத்தை வெளிப்படுத்தினாரோ, அதுபோலத்தான் தனிப்பட்ட முறையில் நானும் எனது கருத்தை வெளிப்படுத்தினேன். 


Advertisement

பலதரப்பட்ட மொழிகளையும், மக்களையும் கொண்டதுதான் இந்தியா. அதுதான் நம் பலமும்கூட. அதற்காக நான் இந்தியை வெறுக்கவில்லை. யாரையும் எதிர்க்கவும் இல்லை. யார்மீதும் எதையும் திணிக்கக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement