தளர்வான ஹெல்மெட், என்ஜினில் தலைமுடி சிக்கி விபத்து: கார் விளையாட்டில் உயிரிழந்த இளம்பெண்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தடையை மீறி செயல்பட்ட பொழுதுபோக்கு கார் விளையாட்டில், வாகனம் ஓட்டிய மாணவி தளர்வான ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலைமுடி இஞ்சினில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.


Advertisement

image

21 வயதான பொறியியல் மாணவி ஸ்ரீ வர்ஷினி, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் புதன்கிழமை மாலை ஹைதராபாத்தின் குர்ரம் குடாவில் உள்ள ஹேஸ்டன் கோ-கார்டிங்கிற்குச் சென்றார். அங்குள்ள பொழுதுபோக்கு கார் விளையாட்டில், இருவர் அமரும் வாகனத்தில் வர்ஷினி தனது மாமாவுடன் அமர்ந்து கார் ஓட்டினார். அப்போது ஏற்பட்ட விபத்தில் வர்ஷினியின் தலைமுடி இஞ்சினில் சிக்கி கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.


Advertisement

ஸ்ரீ வர்ஷினியின் உறவினர் நரேஷ் “நாங்கள் எல்லோரும் தலைக்கவசங்களை அணிந்திருந்தோம், ஆனால் ஸ்ரீ வர்ஷினிக்கு வழங்கப்பட்ட ஹெல்மெட் மிகவும் தளர்வானதாக இருந்தது. அவர்களிடம் சிறிய அளவுள்ள ஹெல்மெட் இல்லை. வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் கழன்று விழுந்து, அவரது தலைமுடி கோ கார்ட்டின் இருக்கைக்கு பின்னால் உள்ள என்ஜினில் சிக்கிக் கொண்டது. படுகாயமடைந்த அவளை நாங்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்” என கூறினார். வாகனத்தின் என்ஜின் திறந்திருந்ததாகவும், அதை மூடியிருந்தால், இதுபோன்ற விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

image

மீர்பேட் காவல் நிலைய ஆய்வாளர் எம்.மஹேந்தர் ரெட்டி, “பிரிவு 304 ஐபிசியின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பேரிடர் மேலாண்மை பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளோம். ஏனெனில் பொழுதுபோக்கு இடங்கள் செயல்படுவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை, இதுபற்றிய விசாரணை நடந்து வருகிறது, விரைவில் இந்த நிறுவன அமைப்பாளர்கள் கைது செய்யப்படுவார்கள்” என கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement