காலை நேரத்தில் தனியாக கோயிலுக்கு வந்த சிம்பு, முகத்தை முழுவதுமாக கருப்புத்துணியால் மூடி, கூலிங்கிளாஸ், தொப்பி அணிந்தபடி சாமி தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடிகர் சிம்பு ரகசியமாக சென்று சாமி தரிசனம் செய்தார். காலை நேரத்தில் உடன் யாரும் இல்லாமல் முகத்தை கருப்புத்துணியால் மூடி, தொப்பி அணிந்து, கூலிங்கிளாஸ் அணிந்தபடி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சிம்பு சென்றார். சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே புறப்படுவதற்காக வந்தபோது கோயில் பட்டர்கள் அவருக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தபோதுதான், கோயிலுக்கு வந்திருப்பது சிம்பு என்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்போனில் புகைப்படம் எடுக்கமுயன்றபோது அவர் காரில் ஏறி உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். சிம்பு நேர்த்திக்கடன் செலுத்தியதாக கூறப்பட்டாலும் எதற்காக நேர்த்திக்கடன் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தில் இவரது ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பார் என்று சொல்லப்பட்டுவருகிறது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!