சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல் : பலம்- பலவீனம் என்ன?

CSK-vs-RCB-today-match--strength-and-weakness---

அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள சென்னை மற்றும் சராசரியான ஃபார்மில் உள்ள பெங்களூரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம்       


Advertisement

image                           

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் எளிதான வெற்றியை கோட்டை விட்ட அதிர்ச்சியில் உள்ளது சென்னை அணி. விளையாடிய 6 போட்டிகளில் 4 தோல்விகளைக் கண்டு, நெருக்கடியிலும் உள்ளது. பேட்டிங்கில் வாட்சன், டூபிளசி மற்றும் அம்பத்தி ராயுடு ஆறுதல் அளிக்கின்றனர். மத்திய வரிசையில் நிலைத்து நின்று அதிரடி காட்ட எந்த வீரரும் ஃபார்மில் இல்லை. கேப்டன் தோனி, ஜாதவ் ரன்களைச் சேர்க்க திணறி வருகின்றனர். ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, சாம் கரண் மட்டுமே ரன்களைச் சேர்க்க பக்கபலமாக உள்ளனர். POWER PLAY SPECIALIST தீபக் சாஹர் ரன்களை வாரி வழங்கி வருவது பலவீனம். சுழற்பந்து வீச்சில் கரண் சர்மா வலு சேர்க்கிறார். பிராவோ, சர்தூல் தாக்கூர் போட்டியின் முக்கிய கட்டங்களில் விக்கெட்டுகளைச் வீழ்த்தும் அஸ்திரமாக உருவெடுத்துள்ளனர்.


Advertisement

image

பெங்களூர் அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங் மேல்வரிசையில் படிக்கல், ஃபின்ச், கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். இருப்பினும் டெல்லிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கோலியைத் தவிர மற்ற மேல் வரிசை வீரர்கள் சறுக்கலைச் சந்தித்தனர். மத்திய வரிசை பேட்டிங்கில் சுந்தர், தூபே ஆறுதலாக உள்ளனர். வாஷிங்டன் சுந்தர் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் திறமை மிக்க பவுலராக ஜொலித்து வருகிறார். அணிக்கு திரும்பியுள்ள சிராஜ் களமிறங்கிய முதல் போட்டியில் வளமையான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். அனுபவ வீரர் மொயின் அலி பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியுள்ளது பின்னடைவே. வேகப்பந்து வீச்சில் உதானா, சைனி, சாஹல் ஆகியோர் ரன்களை அதிகளவில் விட்டுக் கொடுப்பது அணிக்கு பெரும் சிக்கல்.

சவால் மிக்க அணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் பெங்களூர் அணியை, நெருக்கடி மிகுந்த சூழலில் உள்ள சென்னை அணி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பது ரசிகர்கள் மத்தியில் உள்ள மிகுந்த ஆவல். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஆட்டத்தை சென்னை அணி வெளிப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement