சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

Sexual-abuse-of-a-minor--12-years-imprisonment-for-an-elderly-man-in-Madurai

மதுரையில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கடந்த 2016 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், அருகில் இருந்த மாநகராட்சி கழிப்பறையைப் பயன்படுத்தி வந்தார்.

சிறுமி தனியாக வருவதை அறிந்த முதியவர், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரியந்தது. பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.


Advertisement

image

பாலசுப்பிரமணியன் 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.


Advertisement

image

இன்று விசாரணை நிறைவுற்று குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் முதியவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் ப்ளோரா மற்றும் சோபா ஆகியோர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் முதியவர் பாலசுப்பிரமணியன் அடைக்கப்பட்டார்.

சல்பர்டை ஆக்சைடு வெளியேற்றம்: சென்னை மற்றும் நெய்வேலிதான் உலகின் ஹாட்ஸ்பாட்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement