சல்பர்டை ஆக்சைடு வெளியேற்றம்: சென்னை, நெய்வேலிதான் உலகின் ’ஹாட்ஸ்பாட்’

SO2-emissions--Chennai--Neyveli--Ramagundam--Visakhapatnam-among-global-hotspots

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகிலேயே அதிகளவில் சல்பர்டை ஆக்சைடை உமிழும் நாடாக இந்தியா இருந்துவருகிறது.


Advertisement

image

க்ரீன்பீஸ் இந்தியா மற்றும் எரிசக்தி & தூய்மையான காற்று பற்றிய ஆராய்ச்சி மையம் (சிஆர்இஏ) ஆகியவற்றின் சமீபத்திய ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் சல்பர் டை ஆக்சைடு உமிழ்வு 6% குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவு ஆகும், ஆனாலும் இந்தியாவே தொடர்ந்து இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.


Advertisement

மனிதர்களால் உருவாக்கப்படும் சல்பர்டை ஆக்ஸைடு உமிழ்வுகளில் 2019 ஆம் ஆண்டு உலகளவில் 21% இந்தியா உமிழ்ந்துள்ளது. இதன் மூலம் இப்பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும், ரஷ்யா இரண்டாம் இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

image

சல்பர் டை ஆக்சைடு, காற்றினை விஷத்தன்மையுடன் மாசுபடுத்தும், இதனால் மனிதர்களுக்கு பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் இளவயது மரணம் போன்ற அபாயங்கள் அதிகரிக்கிறது. மேலும் இந்த வாயு நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தை மோசமாக பாதிக்கிறது. சமீபத்திய அறிக்கையின்படி, சல்பர் டை ஆக்சைடின் மிகப்பெரிய வெளியேற்ற பகுதிகளாக சிங்க்ராலி, நெய்வேலி, சிபாட், முந்த்ரா, கோர்பா, போண்டா, தம்னர், தல்ச்சர், ஜார்சுகுடா, கட்ச், சூரத், சென்னை, ராமகுண்டம், சந்திரபூர், விசாகப்பட்டினம் மற்றும் கோரடி ஆகியவை உள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

க்ரீன்பீஸ் இந்தியாவின் கூற்றுப்படி “ அரசாங்கங்கள் புதைபடிவ எரிபொருட்களுக்கான முதலீடுகளை குறைத்து, காற்று மற்றும் சூரிய மின்சாரம் போன்ற பாதுகாப்பான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கான நேரம் இது” என தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement