தியேட்டர்களில் வெளியாகிறது க/பெ ரணசிங்கம் : படக்குழு உற்சாக அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சில நாட்களுக்கு முன்பு ஜீ ப்ளக்ஸில் வெளியான க/பெ ரணசிங்கம் படம் அக்டோபர் 16 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுபற்றி டிவிட்டர் செய்தியில், இதுவொரு உணர்ச்சிகரமான தருணம். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு தியேட்டர் அனுபவத்தைப் பெறப்போகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


Advertisement

கொரோனா பாதிப்பால் தியேட்டர்கள் மூடிக்கிடக்கும் நிலையில், கடந்த 2 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ், முனிஸ்காந்த், ரங்கராஜ் பாண்டே,வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

image


Advertisement

ஜீ ப்ளக்ஸில் வெளியாகியுள்ள இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்று அனைத்துத் தரப்பினரும் பாராட்டிவருகிறார்கள். வேலை தேடி வெளிநாடு செல்பவர்கள் உயிரிழந்தால், அவர்களின் உடலை சொந்த நாட்டிற்கு கொண்டுவர ஏற்படும் சிரமங்கள், அதிலிருக்கும் அரசியல் உள்குத்துகள் உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வந்திருக்கிறார், இயக்குநர் விருமாண்டி.

மாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி?.. கசிந்த தகவல்கள்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement