மாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி?.. கசிந்த தகவல்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லோகேஷ் கனகராஜ் இயக்கி வெற்றிகண்ட மாநகரம் படத்தை, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


Advertisement

image

பட வட்டாரத்தில், "வியாழக் கிழமையன்று புதிய படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விஜய் சேதுபதி. மாநகரம் படத்தில் இருந்த முக்கிய கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். அத்துடன் சொந்தக் குரலிலும் பேசவுள்ளார். பழம்பெரும் நடிகர் சஞ்சய் மிஸ்ராவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தீப் கிஷன் கதாபாத்திரத்தில் விக்ராந்த் மாஷே நடிப்பார். மாநகரம் படத்தின் பிரதான கதையை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் டீடெய்ல் செய்திருக்கிறார்கள்" என்கிறார்கள்.


Advertisement

image

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் மாநகரத்தின் ரீமேக்கில் பாலிவுட்டுக்கு ஏற்ப சில மாற்றங்களை மட்டும் செய்யவுள்ளார்கள். மும்பை நகரம் பற்றிய சில சிறப்பான சித்திரிப்புகள் இடம்பெறும். அதேநேரத்தில் மாநகரம் படத்தில் காட்டப்பட்ட சென்னையின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைப் போல மும்பையைக் காட்டமுடியாது என்றும் சொல்லப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் முடிவு செய்யப்பட்ட இந்தப் படத்தை 2021 ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

”இட்லி சலிப்பூட்டும் உணவா?” கொந்தளித்த தென்னிந்தியர்கள்.. சூடான ட்விட்டர் டைம்லைன்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement