பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படாத நிலையில், தினசரி பூஜைகள் தந்திரிகளால் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 10 அர்ச்சகர்கள் உட்பட 12 ஊழியர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இக்கோயில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படாத நிலையில், தினசரி பூஜைகள் தந்திரிகளால் மேற்கொள்ளப்படும் என்று கோயிலின் நிர்வாக அதிகாரி ரத்தீஷன் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு தலைமை அர்ச்சகர்கள், எட்டு துணை அர்ச்சகர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் அடங்குவார்கள், இருப்பினும் அவர்கள் அனைவரும் தற்போது அறிகுறியில்லாமல் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த இக்கோயில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் மாத இறுதியில்தான் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. கேரளாவில் இதுவரை 2,60,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இறப்பு எண்ணிக்கை 930 ஆக உள்ளது. மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளது.
Loading More post
கொடுத்த பொறுப்பை அறிந்து விளையாடும் படைவீரன் வாஷிங்டன் சுந்தர்!
இங்கிலாந்தில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு
மதுரை: திருமண விழாவில் கூகுள் பே, போன் பே மூலம் மொய் வசூல் செய்த மணமக்கள்
"உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு"- ஸ்டேட்டஸ் மூலம் விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!