’சட்டப்படி நடவடிக்கையை நான் எடுப்பேன்’: சூரிக்கு விஷ்ணு விஷால் பதிலடி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இடம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குட்வாலா மீது நடிகர் சூரி புகார் அளித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement

image

“என்மீதும் எனது தந்தைமீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சட்டுக்களைப் பற்றி படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும் வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் நடிகர் சூரி விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தரவேண்டும். “கவரிமான் படம்பரை” என்ற படத்திற்காக 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது.


Advertisement

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. உண்மை வரும் வரை ரசிகர்களும் நலன் விரும்பிகளும் காத்திருக்கவேண்டும். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement