காஞ்சனா படத்தை பார்த்ததால் ’லக்‌ஷ்மி பாம்’ ட்ரைலர் ஈர்க்கவில்லை: நெட்டிசன்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஞ்சனா படத்தை பார்த்ததால் லக்‌ஷ்மி பாம் டிரைலர் ஈர்க்கவில்லை: நெட்டிசன்கள்


Advertisement

 

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது. சமூகத்தினரால் ஒதுக்கப்படும் திருநங்கைகள் படும் கஷ்டத்தையும் புறக்கணிப்புகளையும் சரத்குமார் திருநங்கையாக நடித்து மக்கள் மனங்களை மாற்றியிருப்பார். தமிழில் வெற்றிப் பெற்ற இப்படத்தை இந்தியில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார், கியாரா அதிவானி நடிக்க இயக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.


Advertisement

இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தியேட்டர்கள் இன்னும் திறக்கவில்லை.

அதனால், ஓடிடியில் வெளியிடுகிறார்கள். ஆனால், லக்‌ஷ்மி பாம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு நாடுகளில்  நவம்பர் 9 அன்று தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில்,இப்படத்தின் ட்ரைலரை இன்று அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் காஞ்சனா படத்தோடு ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்,

“என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக மோசமான ட்ரைலர் இதுதான். காஞ்சனா ஒரு தலைசிறந்த படைப்பு. ராகவா லாரன்ஸ் நடிப்பு மனதை ஈர்க்கும் வகையில் இருந்தது. அவரது நடிப்பு காஞ்சனாவின் அனைத்து பாகங்களிலும் கவர்ந்தது.

image

ஆனால்,அக்‌ஷய் குமார் மோசமான நடிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் ’நான் காஞ்சனாவை ஏற்கெனவே பார்த்ததால் அக்‌ஷய் குமாரின் நடிப்பு ட்ரெய்லரிலேயே பிடிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement