சாய்பாசா கருவூல வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்!

Lalu-Prasad-Yadav-granted-bail-in-the-Chaibasa-Treasury-case-related-to-fodder-scam

கால்நடை தீவன விவகாரத்தில், சாய்பாசா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். சில வழக்குகளில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் 2017-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம்  முதல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

image


Advertisement

இதற்கிடையே கால்நடை தீவன வழக்கில் தொடர்புடைய சாய்பாசா கருவூல நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், தும்கா கருவூல நிதி மோசடி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் லாலு பிரசாத் வெளியே வர முடியாத நிலை உள்ளது.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகவும் சிறைவாசம் அனுபவித்து வரும் லாலு பிரசாத், பல்வேறு உடல்நல கோளாறுகள் காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement