விஜய் சேதுபதியின் ‘லாபம்’.... உத்வேகமூட்டும் பாடலை எழுதிய தெருக்குரல் அறிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் சேதுபதி லாபம் படத்தில் உத்வேகமூட்டும் பாடலை எழுதியுள்ள தெருக்குரல் அறிவு


Advertisement

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக்குழு மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானவர் தெருக்குரல் அறிவு. ரஜினியின் காலாவில் ‘உரிமையை மீட்போம்’, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் ’தலைமுறை’, தனுஷின் பட்டாஸில் ’மவனே’, ஆதியின் நட்பே துணையில் ’சிங்கிள் பசங்க’, ராஜூ முருகனின் ஜிப்ஸியில் ‘தீவிர வியாதி’, தற்போது, சூர்யாவின் சூரரைப் போற்றுவில் ’ஊர்க்குருவி பருந்தாகுது’ என்று அறிவு எழுதிய பாடிய பாடல்கள் செம ஹிட்.

image


Advertisement

அதேநேரத்தில், இவரின் தெருக்குரல் ஆல்பம் ஊரெங்கும் ஒலித்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, இவர் பாடிய  ‘சண்ட செய்வோம்’ ராப் பாடல் இந்தியளவில் ஃபேமஸ் ஆகி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.image

இந்நிலையில் இவர், எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் ‘லாபம்’ படத்தில் உற்சாகமூட்டும் பாடலை எழுதி இருக்கிறார். இதனை, இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ’லாபம் படத்தின் இசையமைப்பாளர் தெருக்குரல் அறிவு லாபம் படத்தில் உற்சாகமான பாடலை எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு, அறிவும் ’வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement